×

பலாத்காரம் செய்ய, சொத்தை அபகரிக்க சோனாலிக்கு மதுவில் மர்ம பொருள் கலப்பு: சிபிஐ.க்கு வழக்கு மாற்றம்

ஹிசார்: நடிகை சோனாலி போகத்துக்கு கோவா விருந்தில், அவரை செயலழிக்க செய்வதற்காக மதுவில் ரசாயன போதை பொருளை கலந்ததாக கைது செய்யப்பட்ட உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரியானா மாநிலத்தை சேர்ந்த பிரபல டிக்டாக் நடிகையும், பாஜ.வின் தேசிய மகளிரணி துணைத் தலைவருமான சோனாலி போகத், கடந்த 23ம் தேதி கோவாவில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் சோனாலிக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், உடலில் மர்ம காயங்கள் இருப்பது தெரிந்தது. இதனால், இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும்,  சோனாலியின் உதவியாளர்களான சுதிர் சக்வான், சுக்விந்தர் வாசி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.கோவாவில் உள்ள கர்லிஸ் உணவகத்தில் நடந்த விருந்தின்போது, சோனாலியை செயலிழக்கச் செய்வதற்காக இவர்கள் மர்ம ரசாயன போதை பொருளை மதுவில் கலந்து கொடுத்துள்ளனர். அதை குடித்த காரணத்தால்தான், சோனாலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இறப்பதற்கு முன்பாக, சோனாலியும் 2 உதவியாளர்களும் ஓட்டலின் சலவை பகுதியில் 2 மணி நேரம் இருந்துள்ளனர். அவர்கள் அந்த அறைக்குள் நுழையும் வீடியோ பதிவு கிடைத்துள்ளது. பின்னர், அதிலிருந்து வெளியே வரும்போது, சோனாலியால் நடக்க முடியாமல், அவரை சக்வான் கைத்தாங்கலாக அழைத்து வருவதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. பலாத்காரம் செய்யவும், சொத்தை அபகரிக்கவும் உதவியாளர்கள் ரசாயன பொருளை சோனாலிக்கு கலந்ததாக போலீசார் கருதுகின்றனர். இந்நிலையில், போகத்தின் உடல் அவருடைய சொந்த ஊரான ஹிசாருக்கு விமானம் மூலம் நேற்று கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், நேற்று மாலை இறுதிச்சடங்கு நடந்தது. அவரது சிதைக்கு மகள் தீ மூட்டினார். போகத்தின் கொலை வழக்கை சிபிஐ.க்கு மாற்றி அரியானா முதல்வர் கட்டார் உத்தரவிட்டுள்ளார்….

The post பலாத்காரம் செய்ய, சொத்தை அபகரிக்க சோனாலிக்கு மதுவில் மர்ம பொருள் கலப்பு: சிபிஐ.க்கு வழக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : SONALI ,Hisar ,Sonali Bogata ,Goa ,Dinakaran ,
× RELATED பாஜ எம்பி பிரிஜேந்திர சிங் காங்கிரசில் இணைந்தார்: அரியானாவில் பரபரப்பு